Wednesday, December 06, 2006

எனக்கு விளம்பரம் பிடிக்கும்.

வீட்டிலே, கேபிள் கனெக்ஷன் கிடையாது. தூர்தர்ஷனின் இலவச DTH சேவையைத்தான் உபயோக்கிறேன்.
அதில் வரும் , மூன்று தமிழ் சானல்கள் , சன் , சன் நியூஸ் மற்றும் பொதிகை..

சன் டிவியில் வரும் நிகழ்ச்சிகளிலேயே பிடித்தது அவ்வப்போது காட்டப்ப்டும் சில நல்ல விளம்பரங்கள் தான்.

அதில் சில விளம்பரங்கள் இங்கே:

விளம்பரம் 1:

தங்கள் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் , மூதாட்டி சகோதரிகள். அழைப்பு மணியை , அடித்து விட்டு, ஒளிந்தி கொள்ள , அந்த தாத்தா தம்பி, கதவை திறந்து விட்டு பார்க்கிறார். யாரும் இல்லை . ஒரு தட்டு நிறைய லட்டுகள் மட்டும் உள்ளன . திடீரென அந்த சகோதரிகள் வெளிப்பட்டு , "ஹேப்ப்பி பர்த்டே சீனு" என்று பாட , தாத்தாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மகிழ்ச்சி, உற்சாகம் , சகோதரிகள் இருவரையும் கட்டிக்கொள்கிறார்.

உண்மையான பாசம், பந்தம், எல்லா வயது வரை தொடரும் என்பதை சொல்லும் SBI Life Insurance விளம்பரம். நான் மிகவும் ரசித்த ஒன்று


விளம்பரம் 2 :

இதுவும் ஒரு வங்கியின் விளம்பரம் தான். "பத்திரமா வச்சுக்கோ" என்று அறிவுறித்தி, பேரனின் உண்டியலில் காசு போடுகிறார். அந்தச் சிறுவன் , தூங்கும் போதும் , குளிக்கும் போதும் , உண்டியலை , தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்கிறான். படகில் ஏறி, ஆற்றைக் கடக்கிறான். பட்கோட்டுபவர், சிறுவனைப் பார்த்து, புன்னகை செய்ய, சிறுவன் , உண்டியலை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறான். வங்கிக்குச் சென்று, எட்டாத கவுண்டரில், உண்டியலை வைக்கிறான். வங்கி அதிகாரி, அவனை அழைத்து சென்று, உண்டியலை லாக்கரில் வைக்க, நன்றாக இழுத்துப் பார்த்த பிற்கே சிறுவனுக்கு திருப்தி.
""Bank of India" வின் விளம்பரம் இது. சிறுவன் ரொம்ப க்யூட்.


இதுபோல பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் வந்த சில நல்ல விளம்பரங்களை (உம்: காட்பெரிஸ் ) மீண்டும் பார்க்க ஆசை.. எங்கே கிடைக்கும் என்று தான் தெரியவில்லை.

http://agencyfaqs.com/main.html இல் சில் கோப்புகள் வைத்துள்ளார்கள்.. எல்லாம் அண்மையில் வந்துள்ள விளம்பரங்களாத்தான் இருக்கின்றன.

9 comments:

Karthikeyan said...

அட, என்னைய மாதிரி நீங்களும் விளம்பரப்'பிரியரா'...? புல்லரிக்குது போங்க !!!

இங்கே கொஞ்சம் வாங்க...

http://tamilpoo.blogspot.com/2006/07/55.html

இங்கே நான் குறிப்பிட்ட விளம்பரங்கள் இன்னும் இருக்கின்றனவா தெரியவில்லை...(ஏன்னா நான் டிவி பார்த்து ரொம்ப நாளாச்சு...)

அன்புடன்
கார்த்திகேயன்

நாமக்கல் சிபி said...

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வந்த சாலிடர் டி.வி விளம்பரப் பாடல் எனக்குப் பிடித்த ஒன்று!

வாஷிங்க் பவுடர் நிர்மா!

சந்திரிக்கா சோப்பு - பாடல்!

சேதுக்கரசி said...

நீங்கள் குறிப்பிட்ட இரண்டுமே நல்ல விளம்பரங்கள். சில வருடங்களுக்கு முன்பு, utterly butterly delicious! என்ற அழகான அமுல் வெண்ணெய் விளம்பரங்கள் சிலவற்றை அமுல் வலைத்தளத்தில் பார்த்திருக்கிறேன். இன்னும் இருக்கின்றனவா என்று பார்க்கலாம்.

Sivaram said...

கார்த்திகேயன், நாமக்கல் சிபி, சேதுக்கரசி , வருகைக்கு நன்றி.

நாமக்கல் சிபி said...

எனக்கும் அந்த விளம்பரங்கள் பிடிக்கும்...

Sivaram said...

சோதனை

Gurusamy Thangavel said...

//விளம்பரம் 2 :

இதுவும் ஒரு வங்கியின் விளம்பரம் தான். "பத்திரமா வச்சுக்கோ" என்று ....//

எனக்கும் மிகவும் பிடித்த விளம்பரம். இப்போது வரும் SBI லைப் இன்சூரன்ஸ் விளம்பரம் (தாத்தாக்கள் கிரிக்கெட் விளையாடுவது) நன்றாக இருக்கிறது. 15 - 20 வருடங்களுக்கு முன்னால் வந்தவைகளில் இன்னும் ஞாபகம் இருப்பது. அமலா ஆடும் பரதநாட்டியத்துடன் வரும் UMS ஆன்டெனா பூஸ்டராலே படம் இப்போ தெளிவாகத் தெரிகிறது (எங்க வீட்டில் அப்போது UMS பூஸ்டர் இருந்தது.) அப்புறம் ஸ்ரிபெட் ஜாரு இது ரொம்ப ரொம்ப ஜோரு என்ற விளம்பரங்கள்.

Anonymous said...

பழையதில் எனக்கு பிடித்தது "கோல்ட் ஸ்பாட்" விளம்பரம்...

அப்புறம் நிர்மா...அப்புறம் ஆசை சாக்லேட்.

இப்போ வரும் விளம்பரங்கள் ஒவ்வொன்றும் பட்டாசாக இருக்கின்றன...

செந்தழல் ரவி

Anonymous said...

Mee too!...

பழையதில் எனக்கு பிடித்தது "கோல்ட் ஸ்பாட்" விளம்பரம்...

Gold spot... the zing thing!....