Monday, December 04, 2006

ஆனால், ஆனால், ஆனால்

"ருட்யார்ட் கிப்ளிங்" இன் " IF" கவிதை என்னைக் கவர்ந்த ஒன்று.
அத்னுடைய தமிழாக்கம் இருக்குமா, என்று கூகிள் செய்து பார்த்தேன். ஒன்றும் தென்படவில்லை..
சரி, நாமே , தமிழாக்கம் செய்யலாமே என்று நினைத்தேன்.. பின்பு சரியாக செய்வோமா என்று தயங்கினேன். மறுபடியும் , ஒரு தடவை அதைப் படித்ததில், அக் கவிதையே எனக்கு ஊக்கம் கொடுத்தது.


உன்னுடைய அனைத்தும் தோற்கும்போதும் ,
தோல்விகள் உன்னால் தான் என்று சாடும்போதும்,
நீ தலை நிமிர்ந்து நிற்க முடியுமேயானால்,
அனைவரும் உன்னை சந்தேகிக்கும் போதும்.
அவர்களின் சந்தேகத்தை உணர்ந்து கொண்டு,
உன்னை உன்னால் நம்ப முடியுமேயானால்,
உன்னைப் பற்றி பொய்கள் நிலவும்போதும்,
நீ பொய்களில்
ஈடுபடாதிருப்பேயானால்,
நீ வெறுக்கப்பட்டாலும்,
உன்னை அறிந்து, வெறுப்பதற்கு இடம்
கொடுக்காதிருந்தேயானால்,
அதே சமயம், மிகவும்
நல்லவனாக காட்டிக்கொள்ளாமல் இருப்பேயானால்,
மிகவும்
அறிவாளித்தனத்தோடு பேசாமல் ,இருப்பேயானால்,
கனவுகள் கண்டு, ஆனால்,
கனவுகளை உன் எஜமான் ஆக்காமல்
இருப்பேயானால்,
சிந்தித்து, ஆனால், உன் எ
ல்லா சிந்தனைகளையும் குறிக்கோள் ஆக்காமல்
இருப்பேயானால்,
வெற்றி, தோல்வி சந்தித்து, அவை இரண்டையும்,
சமமாக பாவிப்பேயானால்,
நீ பேசிய உண்மையை , கயவர்களால், திரிக்கப்பட்டு,
நீயே கேட்க நேரிடும்போதும் , அதை
தாங்குவேயானால்,
உன்னால் உயிர்த்த பொருள்கள், உடையும் போதும்,
உழைத்து , மீண்டும் உயிர்ப்பிப்பேயானால்,

உன் வெற்றிகளை ஒரு குவியலாக்கி,
அதைப் பணயமாக வைக்க
துணிவேயானால்,
அதில் தோற்று, ஆனால் தோல்வியைப்பற்றி பேசாது,
ஆரம்பத்தில் இருந்து தொடங்குவேயானால்,
உன் மனம், இதயம் , நரம்பு, தசைகள் அயர்ந்த போதும்,
அவற்றை உனக்காக உழைக்க வைப்பேயானால்,
உன்னிடம் , எதுவும் இல்லையென்ற போதும்,
அவற்றிடம் ,
"தளராதே" என்று சொல்லும் , தைரியம் இருக்குமேயானால்,

கூட்டங்களோடு பேசியும், உன் பண்பைத் தக்க வைத்தேயானால்,
அரசர்களோடு பழகியும்,
உன் எளிமையை, விடாமல் இருப்பேயானால்,
உன் பகைவரோ, நண்பரோ,
உன்னைக் மனக்காயப்படுத்த முடியாது
என்றிருக்குமேயானால்,
அனைவரையும் , மதித்து, ஆனால்
எவரையும் தலைக்கு மேல்,தூக்கி
வைக்காமல் இருப்பேயானால்,
கருணையில்லா எந்த ஒரு நிமிடத்தையும்,
உன் அறுபது நொடிகள் ஓட்டத்தால் ,
நிரப்ப முடியுமேயானால்,
இந்த உலகமும், அதிலுள்ளவையும், உன்னுடைவை..
அதன் பிறகு , வேறென்ன, நீ தான் மனிதன்..என் மகனே


தமிழாக்கம் , செய்த பிறகு, கவிதை மாதிரி இல்லாமல், "raw"வாக அர்த்தம் சொல்லும் பாணியில் அமைந்து விட்டதாக தோன்றியது. பரவாயில்லை..
இதில் சொல், பொருள் குற்றம் இருப்பின், அதை சுட்டிக் காட்டினால், மிகவும் , நன்றியுடையவனாய் இருப்பேன்..
எதுகை, போனை சேர்த்து, இதை , கவிதை போல ஆக்க வழியிருந்தாலும் கூறவும் , மீண்டும்
நன்றியுடையவனாய் இருப்பேன்..

4 comments:

நாமக்கல் சிபி said...

//இந்த உலகமும், அதிலுள்ளவையும், உன்னுடைவை..
அதன் பிறகு , வேறென்ன, நீ தான் மனிதன்..என் மகனே//

உற்சாகம் தரும் வரிகள்.

தமிழாக்கத்திற்கு நன்றி!

Sivaram said...

வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி

Unknown said...

மிக சிறந்த பதிப்பு ..... படித்தவுடன் ஒரு புது தெம்பு மனத்தில் உண்டானது ..... ஆனால் நான் மிகவும் தாமதமாக படித்து உள்ளேன் ...... வாழ்த்துகள்...

Deepa said...

உங்கள் இடுகையின் முதல் பத்தி அப்படியே எனக்கும் பொருந்தும்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக உங்கள் தமிழாக்கம் என் கண்களில் பட்டு விட்டது.
மிகச்சிற‌ப்பாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

ஒரே ஒரு சின்ன திருத்தம். "முடியுமேயானால்" என்பது சரி.

"இருப்பேயானால்" என்பது போன்ற "இருப்பாயானால்" என்கிற மாதிரி வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

All in all, great job. Thank you!