Tuesday, June 17, 2008

சிங்கை சந்திப்பு.. விடுபட்டவை

சிங்கை சந்திப்பு, விடுபட்டவை..







* நீங்கள் ஏன் பதிவு எழுதுவதில்லை.. என கிரி கேட்டார்.. "பயமா இருக்கு" என

உண்மையைச் சொன்னேன்.. அதெல்லாம் தைரியமாக எழுதுங்க..இதுக்கெல்லாம்

பயப்படலாமா ? என்று ஆலோசனை கூறினார்..எனக்கு ஏனோ "அண்ணே, உங்களுக்கு டெர்ரர் ஃபேஸ் ண்ணே " என்று வடிவேலுவை உசுப்பி விடும் சீன் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது..

*வலைப்பதிவு எழுதி யாரும் சம்பாதிக்கிறீங்களா ? என்று சிங்கை நாதன் கேட்டார். அதற்கு கோவியார் , இந்த கார்ன் அல்வா, முறுக்கு இப்படி நொறுக்க வாய்ப்பு கிடைக்கிறதே, இது எல்லாம் சம்பாத்தியம் இல்லையா என சிக்ஸர் அடித்தார்..




* பாரி அரசிடம் நிறைய நேரம் பேசுபவர்களின் , தமிழ் கலைச்சொல் களஞ்சியம் (

vocabulary ?) வளமாகும். தங்கு தடையின்றி பேசி ,நமக்கும் அது போலப் பேச வேண்டும் என ஆவலைத் தூண்டுகிறார்.

* இது போல் ஆவல் தூண்டப்பட்டு , முகவை மைந்தன். கடந்த முறை ஊருக்கு சென்று பழைய நண்பர்களிடம் பேசும் போது, "நான் யூஸ் பண்றேன்" ன்னு சொல்வதை தவிர்த்து, "நான் பயன் படுத்திக் கொண்டிருக்கிறேன், பயன் படுத்திக் கொள்ளவில்லை , " என்று சொன்னதும் , நண்பர்கள் இரண்டடி விலகி நின்று பார்த்ததாக சொன்னார்..



* வலைப்பதிவை , குடும்பத்தினர் படிக்கிறார்களா என்ற கேள்விக்கு கோவியார் அளித்த பதில் , என் அண்ணன் படிச்சுட்டு , சந்தேகம் வந்து, அதை உறுதி செய்வது போல் , ஏதோ ரகசிய சந்திப்புக்கெல்லாம் போய்ட்டு வாரான் " என்று நினைத்து, இவன் நக்ஸல் கூட்டத்தோடு தொடர்பு வைத்துள்ளான் , என்று வீட்டில் போட்டுக் கொடுத்ததாக கூறினார்




*வடுவூர் குமார், சில நல்ல பதிவுகளின் முகவரி கொடுத்தார். அதோடு, அவர் போல துறை சார்ந்த பதிவுகள் எழுதலாம் என ஆலோசனை கொடுத்தார்.

*ஜெகதீசன் , அமைதியாக அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்..நானும் , அவருக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தேன்..அமைதியாகத்தான்..


நான்கு மணி நேர சுக அனுபவம்....

4 comments:

கோவி.கண்ணன் said...

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக போட்டு இருக்கிங்க...

மேலே என் படத்தில் பெரிதாக்கிப் பார்க்கும் போது கைக்கடிகாரத்தில் மணி துல்லியமாக தெரிகிறது.

:)

முகவை மைந்தன் said...

//"அண்ணே, உங்களுக்கு டெர்ரர் ஃபேஸ் ண்ணே " என்று வடிவேலுவை உசுப்பி விடும் சீன் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது"//

//என சிக்ஸர் அடித்தார்..//

பட்டையக் கிளப்பிட்டீங்க ஜீவன். நிறைய எழுதுங்க... வாழ்த்துகள்.

கிரி said...

ஜீவன் ங்கறது நீங்க தானா?

ஏங்க இப்படி நக்கலும் நய்யாண்டியுமா எழுதறீங்க..அப்புறம் என்னங்க.. எழுதறதுக்கு யோசிக்கறீங்க.. அடித்து தூள் பண்ணுங்க.

பின்னூட்ட யோசனை எல்லாம் பண்ணாதீங்க.. கொஞ்ச நாள் நல்ல பதிவா நாலு பதிவு போடுங்க..அப்புறம் ஐயோ இந்த பின்னூட்டம் தொல்லை தாங்க முடியலையேன்னு சொல்வீங்க. (பொய்யாகத்தான் :-) )

Anonymous said...

:) உள்ளேன் ஐய்யா
அன்புடன்
சிங்கை நாதன்