வீட்டிலே, கேபிள் கனெக்ஷன் கிடையாது. தூர்தர்ஷனின் இலவச DTH சேவையைத்தான் உபயோக்கிறேன்.
அதில் வரும் , மூன்று தமிழ் சானல்கள் , சன் , சன் நியூஸ் மற்றும் பொதிகை..
சன் டிவியில் வரும் நிகழ்ச்சிகளிலேயே பிடித்தது அவ்வப்போது காட்டப்ப்டும் சில நல்ல விளம்பரங்கள் தான்.
அதில் சில விளம்பரங்கள் இங்கே:
விளம்பரம் 1:
தங்கள் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் , மூதாட்டி சகோதரிகள். அழைப்பு மணியை , அடித்து விட்டு, ஒளிந்தி கொள்ள , அந்த தாத்தா தம்பி, கதவை திறந்து விட்டு பார்க்கிறார். யாரும் இல்லை . ஒரு தட்டு நிறைய லட்டுகள் மட்டும் உள்ளன . திடீரென அந்த சகோதரிகள் வெளிப்பட்டு , "ஹேப்ப்பி பர்த்டே சீனு" என்று பாட , தாத்தாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மகிழ்ச்சி, உற்சாகம் , சகோதரிகள் இருவரையும் கட்டிக்கொள்கிறார்.
உண்மையான பாசம், பந்தம், எல்லா வயது வரை தொடரும் என்பதை சொல்லும் SBI Life Insurance விளம்பரம். நான் மிகவும் ரசித்த ஒன்று
விளம்பரம் 2 :
இதுவும் ஒரு வங்கியின் விளம்பரம் தான். "பத்திரமா வச்சுக்கோ" என்று அறிவுறித்தி, பேரனின் உண்டியலில் காசு போடுகிறார். அந்தச் சிறுவன் , தூங்கும் போதும் , குளிக்கும் போதும் , உண்டியலை , தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்கிறான். படகில் ஏறி, ஆற்றைக் கடக்கிறான். பட்கோட்டுபவர், சிறுவனைப் பார்த்து, புன்னகை செய்ய, சிறுவன் , உண்டியலை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறான். வங்கிக்குச் சென்று, எட்டாத கவுண்டரில், உண்டியலை வைக்கிறான். வங்கி அதிகாரி, அவனை அழைத்து சென்று, உண்டியலை லாக்கரில் வைக்க, நன்றாக இழுத்துப் பார்த்த பிற்கே சிறுவனுக்கு திருப்தி.
""Bank of India" வின் விளம்பரம் இது. சிறுவன் ரொம்ப க்யூட்.
இதுபோல பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் வந்த சில நல்ல விளம்பரங்களை (உம்: காட்பெரிஸ் ) மீண்டும் பார்க்க ஆசை.. எங்கே கிடைக்கும் என்று தான் தெரியவில்லை.
http://agencyfaqs.com/main.html இல் சில் கோப்புகள் வைத்துள்ளார்கள்.. எல்லாம் அண்மையில் வந்துள்ள விளம்பரங்களாத்தான் இருக்கின்றன.
Wednesday, December 06, 2006
Monday, December 04, 2006
ஆனால், ஆனால், ஆனால்
"ருட்யார்ட் கிப்ளிங்" இன் " IF" கவிதை என்னைக் கவர்ந்த ஒன்று.
அத்னுடைய தமிழாக்கம் இருக்குமா, என்று கூகிள் செய்து பார்த்தேன். ஒன்றும் தென்படவில்லை..
சரி, நாமே , தமிழாக்கம் செய்யலாமே என்று நினைத்தேன்.. பின்பு சரியாக செய்வோமா என்று தயங்கினேன். மறுபடியும் , ஒரு தடவை அதைப் படித்ததில், அக் கவிதையே எனக்கு ஊக்கம் கொடுத்தது.
உன்னுடைய அனைத்தும் தோற்கும்போதும் ,
தோல்விகள் உன்னால் தான் என்று சாடும்போதும்,
நீ தலை நிமிர்ந்து நிற்க முடியுமேயானால்,
அனைவரும் உன்னை சந்தேகிக்கும் போதும்.
அவர்களின் சந்தேகத்தை உணர்ந்து கொண்டு,
உன்னை உன்னால் நம்ப முடியுமேயானால்,
உன்னைப் பற்றி பொய்கள் நிலவும்போதும், நீ பொய்களில்
ஈடுபடாதிருப்பேயானால்,
நீ வெறுக்கப்பட்டாலும், உன்னை அறிந்து, வெறுப்பதற்கு இடம்
கொடுக்காதிருந்தேயானால்,
அதே சமயம், மிகவும் நல்லவனாக காட்டிக்கொள்ளாமல் இருப்பேயானால்,
மிகவும் அறிவாளித்தனத்தோடு பேசாமல் ,இருப்பேயானால்,
கனவுகள் கண்டு, ஆனால், கனவுகளை உன் எஜமான் ஆக்காமல்
இருப்பேயானால்,
சிந்தித்து, ஆனால், உன் எல்லா சிந்தனைகளையும் குறிக்கோள் ஆக்காமல்
இருப்பேயானால்,
வெற்றி, தோல்வி சந்தித்து, அவை இரண்டையும், சமமாக பாவிப்பேயானால்,
நீ பேசிய உண்மையை , கயவர்களால், திரிக்கப்பட்டு,
நீயே கேட்க நேரிடும்போதும் , அதை தாங்குவேயானால்,
உன்னால் உயிர்த்த பொருள்கள், உடையும் போதும்,
உழைத்து , மீண்டும் உயிர்ப்பிப்பேயானால்,
உன் வெற்றிகளை ஒரு குவியலாக்கி,
அதைப் பணயமாக வைக்க துணிவேயானால்,
அதில் தோற்று, ஆனால் தோல்வியைப்பற்றி பேசாது,
ஆரம்பத்தில் இருந்து தொடங்குவேயானால்,
உன் மனம், இதயம் , நரம்பு, தசைகள் அயர்ந்த போதும்,
அவற்றை உனக்காக உழைக்க வைப்பேயானால்,
உன்னிடம் , எதுவும் இல்லையென்ற போதும்,
அவற்றிடம் , "தளராதே" என்று சொல்லும் , தைரியம் இருக்குமேயானால்,
கூட்டங்களோடு பேசியும், உன் பண்பைத் தக்க வைத்தேயானால்,
அரசர்களோடு பழகியும், உன் எளிமையை, விடாமல் இருப்பேயானால்,
உன் பகைவரோ, நண்பரோ, உன்னைக் மனக்காயப்படுத்த முடியாது
என்றிருக்குமேயானால்,
அனைவரையும் , மதித்து, ஆனால் எவரையும் தலைக்கு மேல்,தூக்கி
வைக்காமல் இருப்பேயானால்,
கருணையில்லா எந்த ஒரு நிமிடத்தையும்,
உன் அறுபது நொடிகள் ஓட்டத்தால் , நிரப்ப முடியுமேயானால்,
இந்த உலகமும், அதிலுள்ளவையும், உன்னுடைவை..
அதன் பிறகு , வேறென்ன, நீ தான் மனிதன்..என் மகனே
தமிழாக்கம் , செய்த பிறகு, கவிதை மாதிரி இல்லாமல், "raw"வாக அர்த்தம் சொல்லும் பாணியில் அமைந்து விட்டதாக தோன்றியது. பரவாயில்லை..
இதில் சொல், பொருள் குற்றம் இருப்பின், அதை சுட்டிக் காட்டினால், மிகவும் , நன்றியுடையவனாய் இருப்பேன்..
எதுகை, போனை சேர்த்து, இதை , கவிதை போல ஆக்க வழியிருந்தாலும் கூறவும் , மீண்டும் நன்றியுடையவனாய் இருப்பேன்..

Thursday, October 26, 2006
விதியின் இரண்டாவது சதி :
விதியின் இரண்டாவது சதி :
யார் கண்ணு பட்டதோ தெரியல .. ரெண்டு மாசம், ஜாலியா பாட்டும் ப்ளாக்கருமா , ஆபிஸ்ல பொழுத ஓட்டலாம் னு நினைச்சா , என்னோட மேனேஜர், இந்த வருஷத்துகான டார்கட் எல்லாம் , நான் போறதுக்குள்ளே , முடிச்சிட்டுப் போகனும்னு சொல்ல , வேற வழியில்லாம , வேலை செய்ய வேண்டியதாப் போச்சு.
அதனால பாருங்க, , என் இரண்டாவது பதிவைப் போட கிட்டத்தட்ட 20 நாளாகிப் போச்சு .
பரவாயில்ல , இன்னிக்குள்ள என் மூணாவது பதிவையும் போட்டு, தமிழ் மணத்தில சீட் புடிச்சிக்கிறேன்.

முதல் பதிவு
விதியின் சதி
சும்மாவே, அலுவலகத்தில் , எனக்கு பொழுது போகாது ( !) , முந்தா நேத்து , பேப்பர் போட்டுட்டேனா ,, இன்னும் ரெண்டு மாசம் , நோட்டீஸ் பீரியட் , எப்படித்தான் , கழிக்கப் போறேனோ, என்று கவலைப்பட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போது , உருவானதது தான் , இந்த "ப்ளாக்" ஐடியா.
ஆகவே, நண்பர்களே , "இணையம் என்னும் சமுத்திரத்தில் குதித்து, "ப்ளாக்" என்னும் முத்தெடுக்க .... " ஹலோ , சரி, சரி ஜன்னலை மூடிடாதிங்க...அதாவது நானும் கொஞ்சம் , ஒரு ஒரமா , நின்னு , கருத்து சொல்லிக்கிறேன்னு சொல்ல வந்தேன்.

Subscribe to:
Posts (Atom)